அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல்: டிரைவர் கைது

அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-12 18:17 GMT

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குன்னியூர் முள்ளியாற்றுப்படுகையில் இருந்து மணலை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வேனை போலீசார் விரட்டிச் சென்று 49.நெம்மேலி பெருமாள் கோவில் அருகே மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். இதில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வேன் டிரைவர் சேரி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை (வயது47) என்பவரை கைதுசெய்தனர். மணல் ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்