வேன் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
கருங்கல் அருகே வேன் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே வேன் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல் அருகே உள்ள இலவுவிளை காரான்விளை பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது 30). இவருடைய மனைவி ப்ரீதா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அஸ்வின் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன்பெற்று வேன் வாங்கி தொழில் செய்து வந்தார். இந்நிலையில், அஸ்வினால் வாகனத்திற்கான தவணையை சரியாக கட்ட முடியவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்தநிைலயில் அஸ்வின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி ப்ரீதா கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அஸ்வினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.