சேத்தியாத்தோப்பு அருகேடிராக்டர் மோதி வேன் டிரைவர் பலி

சேத்தியாத்தோப்பு அருகே டிராக்டர் மோதி வேன் டிரைவர் பலியானாா்.

Update: 2023-02-05 18:45 GMT


சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அடுத்த பூதம்குடி கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் மோகன்ராஜ் (வயது 36). வேன் டிரைவர். இவரது மாமா அசோகன் (50). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பில் இருந்து வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சேத்தியாத்தோப்பு வெள்ளை ராஜன் வாய்க்கால் அருகே சென்ற போது, அந்த வழியாக கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் மோகன்ராஜ், அசோகன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அசோகன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மோகன்ராஜ் மனைவி தீபா சேத்தியாத் தோப்பு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்