திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் கீழவிளையை சேர்ந்தவர் பூதன்பிள்ளை. இவருடைய மகன் சுபாஷ் (வயது38), வேன் டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று சுபாஷ் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுபாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுபாசின் மனைவி வாணிஸ்ரீ இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.