ரேஷன் அரிசி கடத்தி வந்த வேன் டிரைவர் கைது
ரேஷன் அரிசி கடத்தி வந்த வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை தாலுகா சின்னரெட்டிபட்டி அருகே கரூர் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக வேன் டிரைவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஏழுமலை (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.