வேன்-கார் மோதல்; 5 பேர் படுகாயம்

ஓட்டப்பிடாரம் அருகே வேன்-கார் மோதிக் கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-20 19:00 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே வேன்-கார் மோதிக் கொண்டதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

வேன்-கார் மோதல்

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலஸ் நகரை சேர்ந்தவர் வரதராஜ் என்பது தனது குடும்பத்தினர் உள்பட 6 பேருடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புறப்பட்டனர்.

கார் மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சந்திரகிரி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்லும்போது லாரியின் பக்கவாட்டில் கார் உரசியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழி சாலையில் இருந்து தடுப்பு சுவரைத் தாண்டி எதிர் திசையில் திருச்செந்தூரில் இருந்து திருவேங்கடம் நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மீது மோதியது.

5 பேர் படுகாயம்

இதில் காரில் இருந்த வரதராஜ் மனைவி கோகிலா (வயது 52), வேனில் இருந்த நல்லதம்பி மனைவி சந்திரா (65), மகன் மகேந்திரன் (41), செல்வம் மனைவி உமா மீனா (41), மீன்ராஜ் மனைவி செல்வி (41) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இந்தசம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் ஓட்டப்பிடராம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர்கள் வந்து விபத்துக்குள்ளான வேன்-காரை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்