5 அடி ஆழ பள்ளத்தில் இறங்கிய வேன்

ஓசூர் அருகே 5 அடி ஆழ பள்ளத்தில் வேன் இறங்கியதால் மாணவ-மாணவிகள் காயமின்றி தப்பினர்.

Update: 2022-07-27 16:29 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே நல்லூர் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வேன் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுடன் நேற்று மாலை ஜூஜூவாடிக்கு சென்றது. மடிவாளம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 5 அடி ஆழ பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் இருந்த மாணவ, மாணவிகள் காயமின்றி தப்பினர். பின்னர், மாற்று வாகனம் ஏற்பாடு செய்து மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் வீட்டுக்கு செல்ல தாமதம் ஏற்பட்டது. பள்ளி வேன் விபத்தில் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்