வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் திருவிழா -கொடியேற்றத்துடன் தொடங்கியது
வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வால்பாறை
வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேளாங்கண்ணி மாதா ஆலயம்
வால்பாறை அருகில் கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தின் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் ஆலய பங்கு குரு மரியஜோசப் தலைமையில், உதவி பங்கு குரு இம்மானுவேல், அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய பங்கு குரு ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருப்பலிக்கு முன் திருவிழா கொடியானது ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டு மந்திரித்து ஏற்றி வைக்கப்பட்டது.
8-ந்தேதி தேர் பவனி
கொடியேற்றத்தின் போது வேளாங்கண்ணி மாதா பக்தர்கள் மரியே வாழ்க என்று முழங்கினார்கள்.
தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 8-ந்தேதி வேளாங்கண்ணி மாதா பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலியும் தொடர்ந்து ஆலயத்தை சுற்றி மாதா சொரூபம் தாங்கிய தேர் பவனியும் நடைபெறுகிறது.
கூட்டு பாடல் திருப்பலி
வருகிற 10-ந் தேதி மாலை 7.30 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ்அக்குவினாஸ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலியும் அதனை தொடர்ந்து பல்வேறு எஸ்டேட் பகுதியில் இருந்து தேர் பவனி நடைபெறுகிறது. 11-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு குரு மரியஜோசப் தலைமையில் வால்பாறை திரு இருதய ஆலய பங்கு மக்கள் மற்றும் வேளாங்கண்ணி மாதா திருத்தல பங்கு மக்களும் செய்து வருகின்றனர்.