வால்பாறை உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் வெற்றி

மண்டல கைப்பந்து போட்டியில் வால்பாறை உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.

Update: 2022-08-26 16:32 GMT

வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவில் பல்வேறு போட்டிகள் கோட்டூரில் நடைபெற்றது. இதில் வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் வால்பாறை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகள் தங்கி படிக்கும் உண்டு உறைவிட பள்ளி மாணவி கவிசிரி பங்கேற்ற கால்பந்து அணி முதலிடம் பெற்றது.

இதே போல் கைப்பந்து போட்டியிலும் உண்டு உறைவிட பள்ளி யின் மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்