வள்ளி கும்மி கலைநிகழ்ச்சி- ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்

வள்ளி கும்மி கலைநிகழ்ச்சி- ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்

Update: 2023-10-07 22:44 GMT

ஈரோடு அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கொ.ம.தே.க. சார்பில் கொங்கு நாடு முழுவதும் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருகிற பிப்ரவரி மாதம் 4-ந்தேதி பெருந்துறையில் நடக்கும் மாநாட்டில் 10 ஆயிரம் பேர் வள்ளி கும்மியை அரங்கேற்றி உலக சாதனை படைக்க உள்ளோம்.

பா.ஜனதாவில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி விட்டதால் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு போவதற்கு வாய்ப்பு இல்லை. தி.மு.க. தலைமையில் உள்ள இந்தியா கூட்டணி வலுவாக, தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால் கூட்டணி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதாக இல்லை. யார் எதிர்கட்சியாக இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என போராட்டம் நடத்துவது வழக்கமாக இருக்கிறது. விவசாயிகளுக்கு இழப்பீடு அதிகமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தமிழ்நாட்டின் தேர்தல் களம் என்பது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தான். கள்ளுக்கான தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நீக்கினால் விவசாயிகள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.

அப்போது அவருடன், மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.வள்ளி கும்மி கலை நிகழ்ச்சியை ஏரளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்