நெகமம் அருகே பரிதாபம்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி வாலிபர் பலி

நெகமம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-03 15:22 GMT

நெகமம்

நெகமம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ெதாழிலாளியின் மகன்

நெகமம் அருகே உள்ள கரப்பாடியை சேர்ந்தவர் ராமசாமி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை. மகேந்திரன் (வயது 23), இவர்களுக்கு பிரபாகரன் என 2 மகன்கள் உள்ளனர். பிரபாகரன் அந்தப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மகேந்திரன் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது.

 ராமசாமி, மணிமேகலை இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பிரபாகரன் கல்லூரிக்கு சென்று விட்டார். மகேந்திரன் மட்டும் தனியாக வீட்டில் இருந்து உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் புதிதாக தண்ணீர் தொட்டி 8 அடி ஆழத்திற்கு கட்டியுள்ளனர். அதில் 6 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்து உள்ளது.

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தார்

இந்த தண்ணீர் தொட்டிற்கு மூடி போடாத நிலையில் உள்ளதால் மகேந்திரன் எதிர்பாராத விதமாக தொட்டியில் தவறி விழுந்தார். மேலும் அவர் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். வேலைக்கு சென்ற பெற்றோர் மதியம் சாப்பாட்டிற்கு வந்து உள்ளனர். அப்போது மகனை காணவில்லை என்று தேடியபோது தண்ணீர் தொட்டியை எட்டி பார்த்தனர். அங்கு மகேந்திரன் தண்ணீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடினார். இதனை கவனித்தஅவர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

ஆனால் செல்லும் வழியில் மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்