சரக்கு வாகனத்தை திருடிய வாலிபர் கைது
எருமப்பட்டியில் சரக்கு வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் பண்டாரம் மகன் ராஜேந்திரன் (வயது 50). இவர் சரக்கு வாகனம் வைத்து உள்ளார். இந்த நிலையில் பண்ணக்காரன் பட்டியில் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி அங்கு பொருட்களை இறக்கி விட்டு விட்டு டிைரவா் ஜெகன் (22) இரவு 11 மணி அளவில் கடை முன்பு வாகனத்ைத நிறுத்திவிட்டு வந்துவிட்டார். இந்த நிலையில் 4 மணி அளவில் கடைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை யாரோ அடையாளம் தெரியாத நபர் திருடி சென்று கொண்டிருப்பதாகவும், வாகனம் எருமப்பட்டியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் எடுத்துச் செல்வதாகவும் ராஜேந்திரனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையொட்டி வாகனத்தை தேடி சென்ற பொழுது அலங்காநத்தம் பிரிவிலிருந்து போடிநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் பி.ஜி.கே. திருமண மண்டபம் அருகே வாகனம் நின்று கொண்டிருந்தது. வாகனத்தை திருடிய நபரை பிடித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில் திருடிய நபர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நெய்வாசல் அருகே உள்ள தொருகுழி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் வீரசெல்வன் (26) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஏ.சி. ரிப்பேர் செய்யும் மெக்கானிக் என்பதும் தெரியவந்தது. இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த எருமப்பட்டி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.