பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது
தர்மபுரியில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர் நவீன் குமார் (வயது 19). இவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நவீன்குமாரை நேற்று கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.