கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Update: 2023-09-28 17:24 GMT


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் பல்வேறு மதங்களை சேர்ந்த 126 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் திருப்பூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சவுமியா வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் விழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார். துணைமேயர் பாலசுப்பிரமணியம், 3-ம் மண்டல தலைவா் கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். அதைத்தொடர்ந்து கா்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டது. முடிவில் மாவட்ட திட்ட உதவியாளர் அனுசுயா நன்றி கூறினார். இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகி திலக்ராஜ், சமூக நலத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்