வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வாசுதேவன், ஒன்றிய ஆணையர்கள் கலை, பொற்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், கீதா, மாலதி, ராஜேஸ்வரி, சீதாலட்சுமி, விமலா, ரேணுகா, காந்திமதி, ரசூல் நஸ்ரின் தாமரைச்செல்வன் உள்ளிட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாதாந்திர வரவு-செலவு மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.