வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சாத்தான்குளத்தில் வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-02-13 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலையில் மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணா குதி, இரவு புதன் ஹோரையில் யந்திர ஸ்தாபனம் ஆகிய பூஜைகளும், 2- ஆம்நாள் காலையில் மகாகணபதி மூல மந்திர ஹோமம், ரக்ஸா பந்தம், ஸ்பர்னா குதி, பூர்ணா குதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறம்பாடு, விமானம் மற்றும் வலம்புரி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்