வைகுண்ட ஏகாதசி.. பகல் பத்து 4ம் திருநாள் - பக்தி பரவசமான பக்தர்கள்
நம்பெருமாள் முத்து சாய கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர காது காப்பு, முத்துச்சரம், பவள மாலை அடுக்குப் பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் சூடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து நான்காம் நாளான திங்கள்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் முத்து ஆண்டாள் கொண்டை அணிந்து செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் சூடியபடி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஸ்ரீ நம்பெருமாள். 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.