மங்கலம்பேட்டைபால தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக வழிபாடு
மங்கலம்பேட்டை பால தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக வழிபாடு நடைபெற்றது.
மங்கலம்பேட்டை,
மங்கலம்பேட்டை ஸ்ரீ பால தண்டாயுதபாணி சாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு 201 இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.