வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

Update: 2023-06-02 19:30 GMT

வால்பாறை

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று காலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் முன் மண்டபத்தில் 108 கலச வழிபாடு மற்றும் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

முருகப்பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாகத்தில் வழிபாடு நடத்தினால், ஆண்டு முழுவதும் முருகனுக்கு வழிபாடு நடத்துவதால் கிடைக்கும் பரிபூரண பலனை அடைந்து விடலாம் என்பது ஐதீகம்.

இதனால் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து முருக பக்தர்களும், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்