கோவில்பட்டி கோவிலில் பவுர்ணமி பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் வைகாசி பவுர்ணமி சிறப்புப் பூஜை நடைபெற்றது.

Update: 2022-06-14 11:18 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் வைகாசி பவுர்ணமி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார திபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்