கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது

நாட்டரசன்கோட்டையில் உள்ள புகழ்பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-05-25 18:45 GMT

நாட்டரசன்கோட்டையில் உள்ள புகழ்பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வைகாசி திருவிழா

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தி்ற்கு சொந்தமான கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டும் இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இநத நிகழ்ச்சியி்ல் கோவில் கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் செட்டியார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவு வெள்ளிக்கேடகத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 7-ம் நாள் மாலை 6 மணிக்கு மேல் தங்கரதம் நிகழ்ச்சி நடக்கிறது.

வெள்ளி ரதம்

வருகிற ஜூன் 1-ந்தேதி 8-ம் திருநாள் இரவு 7 மணிக்கு மேல் புகழ்பெற்ற வெள்ளிரதம் நிகழ்ச்சி நடக்கிறது. மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட வெள்ளி ரதத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வருவார். இதை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். 9-ம் திருநாள் காலை 9.25 மணி முதல் 10.25 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாள் பூப்பல்லக்கு, முயல் குத்துதல் நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான சமஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் செட்டியார், மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்