முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது.

Update: 2022-06-07 18:11 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூரை அடுத்த புதுநடுவலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 3-ந்தேதி சக்தி அழைத்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 5 நாட்கள் நடந்தது. இதையொட்டி தினமும் சிறப்பு வழிபாடும், வாண வேடிக்கையுடன் அம்மன் புறப்பாடும் நடந்தது. 5-ந்தேதி மாவிளக்கு பூஜையும், குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், கரகாட்டம் மற்றும் வாண வேடிக்கையும் நடந்தன.

நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் வந்தனர். மாலையில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாச ரெட்டியார் தலைமை தாங்கினார். இதில் புதுநடுவலூர் ஊராட்சி தலைவர் ஜெயந்திநீலராஜ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இரவில் சப்பரத்தில் உற்சவ அம்மன் சிலை வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு, மேளதாளங்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்