வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெருவிழா
வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆண்டு பெருவிழா
கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. திருச்சி மாவட்ட வேளாங்கண்ணி என பக்தர்களால் போற்றப்படும் இந்த ஆலயத்தின் 350-வது ஆண்டு பெருவிழா இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. குழுமூர் பங்குதந்தைகள் குழந்தைசாமி, சாந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். ஆலய பங்குதந்தை தனிஸ்லாஸ், உதவிபங்குதந்தை ஜோசப்இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்த விழா செப்டம்பர் 9-ந் தேதி வரை நடக்கிறது. அருட்தந்தையர்கள் ஜோசப்ஆரோக்கியராஜ், ஜான்கென்னடி, ஜோசப் கஸ்பார், சுவக்கின், தனராஜ், குழந்தைராஜ், லியோநல்லுஸ்ராஜா ஆகியோர் தலைமையில் தினமும் மாலை 6.30 மணியளவில் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வேண்டுதல் சப்பரபவனி நடைபெறுகிறது.
சப்பர பவனி
7-ந் தேதி மாலை 6.30 மணியளவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி மற்றும் புள்ளம்பாடி மறைவட்ட குருக்கள் சூசைமாணிக்கம் தலைமையில் திருவிழா ஆடம்பரதிருப்பலியை நிறைவேற்றுகிறார்கள். இரவு 11 மணியளவில் ஆடம்பர சப்பரங்களின் பவனி நடைபெறும், 8-ந்தேதி காலை 6 மணியளவில் அருட்தந்தையர் தெரஸ்நாதன் தலைமையிலும், 8 மணிக்கு புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு சூசைமாணிக்கம் தலைமையிலும் அன்னையின் பிறப்பு பெருவிழா, ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 4 மணிக்கு மாதா சொரூபம் தாங்கிய தேர்பவனி நடக்கிறது. தொடர்ந்து 9-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஆலய பங்குதந்தை தனிஸ்லாஸ், உதவிபங்குதந்தை ஜோசப் இன்பராஜ் ஆகியோர் தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் கொடியிறக்கத்துடன் ஆண்டுபெருவிழா நிறைவுபெறும்.
விழாவையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் வியாகுலஈஸ்வரி, துணைத்தலைவர் அலெக்ஸ்செல்வராஜ் அறிவுறுத்தலின்படி கிராமம் முழுவதும் தூய்மை பணிகள், குடிநீர் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயபங்குதந்தை தனிஸ்லாஸ், உதவிபங்குதந்தை ஜோசப்இன்பராஜ், திருச்சிலுவை கன்னியர்கள், கிராம பட்டையதார்கள், அன்பியபொறுப்பாளர்கள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.