வடிவேலு சினிமா பட பாணியில் 'நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்' என தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது

வடிவேலு சினிமா பட பாணியில் ‘நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்’ என தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2022-10-13 22:00 GMT

சத்தியமங்கலம்

சினிமா டைரக்டர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்னும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் காட்சியில் போலீஸ் ஜீப்பில் ஏறும் வடிவேல் நான் ஜெயிலுக்கு போறேன். நான் ஜெயிலுக்கு போறேன். நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான் என பேசுவார். இந்த நகைச்சுவை காட்சி பட்டிதொட்டி எல்லாம் பரவி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுபோன்ற சம்பவம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சத்தியமங்கலம் போலீசார் கொமாரபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் ஒருவர் நின்று கொண்டு, 'நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான். நான் பெரிய ரவுடியாக போகிறேன். அரசு சொத்துக்களை அடித்து நொறுக்கினால் தான் அரசுக்கு நான் யார் என தெரியும்,' என வடிவேல் சினிமா பட பாணியில் அந்த பகுதியில் சத்தம் போட்டபடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவரை விட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருதிய போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 26),' என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்