வடவீதி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலையில் வடவீதி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வடவீதி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி கோவில் புனரமைப்பு பணி பணிக்கான பாலாலயம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து கடந்த 29-ந் தேதி பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது. இதையடுத்து கடந்த 2-ந் தேதி கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
கோவிலுக்கு எதிரில் யாக சாலை அமைத்து மூன்று நாட்கள் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாக பூஜையும், பூர்ணாஹூதியும் நடைபெற்றது.
பின்னர் யாக குண்டத்தில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று கருவறை விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று பக்தி ழுழக்கமிட்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் சாமி தாிசனம் செய்தனர்.