வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2023-05-19 19:58 GMT

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் 249 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் மாணவி மதுமதி 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவர் பாலகிஷன் 493 மதிப்பெண் பெற்று 2-வது இடமும், மாணவிகள் அகஸ்தியா, பாலசவுமியா ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தனர்.

மொத்தம் 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களும். 450-க்கு மேல் 59 மாணவர்களும், 400-க்கு மேல் 118 மாணவர்களும் பெற்று சாதனை படைத்தனர். இதேபோன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜெஸ்மின் பிரித்தி 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவர் கிரகாம் பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்