வடபத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

இட்டமொழியில் வடபத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-02-01 18:45 GMT

இட்டமொழி:

இட்டமொழி சைவ வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த வடபத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மங்கள இசை, மகாகணபதி ஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனை, முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 2-ம் நாள் இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று 3-ம் நாள் காலை நான்காம் கால யாகசாலை பூஜை, செண்பக விநாயகர் மகாகும்பாபிஷேகம் மற்றும் வடபத்திரகாளி அம்மன், முத்தாரம்மன், ருக்மணி அம்மன், உச்சினிமாகாளி அம்மன், சந்தியம்மன், லாடசன்னியாசி, சங்கிலி பூதத்தார், காத்தவராயன், சுடலைமாடசாமி, பைரவர், வேதாளம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், விமான கலசத்திற்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மகேஷ்வர பூஜை, அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்