வடபத்ர காளியம்மன் கோவில் திருவிழா
பாபநாசம் அருகே வடபத்ர காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே குப்பை மேட்டில் அமைந்துள்ள வடபத்ர காளியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது. இதையொட்டி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யபபட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குப்பைமேடு பகுதியை சேர்ந்த கிராம மக்கள், நாட்டாமை, பஞ்சாயத்தார்கள்மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.