வாச்சாத்தி தீர்ப்பு: எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் - திருமாவளவன் அறிக்கை

வாச்சாத்தி வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-30 19:13 GMT

கோப்புப்படம்

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாச்சாத்தி வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்கின்றோம். இதற்காக தொடர்ந்து உறுதியாக போராடிய வாச்சாத்தி மக்களுக்கும், அவர்களுக்கு துணையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பழங்குடி மக்கள் உள்ளிட்ட எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு புகட்டப்பட்ட பாடம் இந்தத் தீர்ப்பு. இந்த வன்கொடுமை சம்பவம் நடைபெற்றபோது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என கூறினார். இருந்தபோதிலும் கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வேலையும் வழங்குவதோடு, தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போன்று காவல்துறை கண்காணிப்பாளர், வனத்துறை அலுவலர் ஆகியோர் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்