100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி

100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2022-09-28 19:02 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் மண்டல இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் வெறிநோய் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளில் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து அதற்கு இலவசமாக தடுப்பூசி போட்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமிற்கு மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் அரசு தலைமை தாங்கினார். துணை இயக்குனர் (பொறுப்பு) சாமி வெங்கடேசன் உள்பட கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்