இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

ஆலங்குளத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2023-01-24 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஆலங்குளம் ஒன்றிய குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தென்காசி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் மகேஸ்வரி வரவேற்றார். நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி மணிமாறன் முன்னிலை வகித்தார்.

அதனை தொடர்ந்து நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் மருத்துவர் ஜான் சுபாஷ் வெறிநோய் குறித்து பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினார். கால்நடை மருத்துவர் மனோகரன் வன விலங்குகள் வழியே ரேபிஸ் நோய் பரவும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.

முகாமில் நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆலங்குளம் கால்நடை மருத்துவர் ராஜஜுலியட் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்