ஊராட்சிகளில் காலியாக உள்ள செயலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

ஊராட்சிகளில் காலியாக உள்ள செயலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-02-28 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்கள் கூட்டமைப்பு தலைவரும், பாலகொலா ஊராட்சி துணைத்தலைவருமான மஞ்சை.வி.மோகன் தலைமையில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், கிராம ஊராட்சியில் நடக்கும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம் நடக்கும் வளர்ச்சி பணிகளைப் பற்றிய விவரங்களை அனைத்து மக்களும் அறியும்படி வேலை தொடங்கும் போதே அறிவிப்பு பலகை வைத்திட வேண்டும். ஊராட்சிகளின் தலைவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு பணிக்கான உத்தரவினை பெற அனுப்பப்படும் விவரங்களில் வார்டு உறுப்பினர்களின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சிகளின் துணைத்தலைவர்கள் கையொப்பம் இடம் பெற வழிவகை செய்திட வேண்டும். ஊராட்சிகளின் பொது நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் ஊராட்சிமன்றத்தின் தீர்மானத்தின் படியே நடைப்பெற வேண்டும்.

மாவட்டத்தில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி செய்யும் ஊராட்சி செயலாளர்களை இடம் மாற்றம் செய்திட வேண்டும். மேலும் காலியாக உள்ள ஊராட்சி செயலர்களின் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். மேலும் மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன. மனு அளித்தபோது, மாவட்ட ஊரக முகமை இயக்குனர் ஜெயராமன் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்