காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்:சாலை பணியாளர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தேனியில் நடந்த சாலை பணியாளர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-08-12 18:45 GMT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு தேனியில் நடந்தது. மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாண்டியராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முருகேசன் அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாஜூதீன் தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். இந்த மாநாட்டில், முடக்கப்பட்ட சரண்டர் விடுப்பு ஒப்படைப்பை திரும்ப நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி துறையில் பணியிடங்கள் தடை செய்கின்ற அரசாணையை திரும்பப் பெற வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் அறிவிக்கப்பட்ட 14 ஆயிரம் சாலை பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்