அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்-ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம்

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-08-20 18:18 GMT

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 6-வது மாநில மாநாடு புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளில் பிரதிநிதிகள் மாநாடு மாநில தலைவர் ரத்னமாலா தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் டெய்சி அறிக்கைகளை முன்வைத்தனர். மாநாட்டில் வரவேற்புக்குழுத் தலைவர் சின்னதுரை எம்.எல்.ஏ., அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு, சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில் அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக அறிவித்து குறைந்தபட்சம் ஊழியர்களுக்கு ரூ.21 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ரூ.18 ஆயிரமும் ஊதியம் வழங்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி 10 ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். 26 ஆண்டு பணிமுடித்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பணியாளர், உதவியாளர் காலிப்பணிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து இடைநிலை ஆசிரியருக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்