வ.உ.சிதம்பரனாரின் லட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன - பிரதமர் மோடி

வ.உ.சிதம்பரனாரின் லட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-05 05:01 GMT

புதுடெல்லி,

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் (வ.உ.சி.) 151-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வ.உ.சி.யின் திருவுருவப்படதிற்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் வ.உ.சிதம்பரனாரின் லட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மாண்புமிகு வ. உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலிகள். சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நமது தேசம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு அடைவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவரது லட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்