நாமக்கல், ராசிபுரம் உழவர் சந்தைகள் ரூ.56¾ லட்சத்தில் புதுப்பிக்கும் பணி

நாமக்கல் மற்றும் ராசிபுரம் உழவர் சந்தைகள் ரூ.56 லட்சத்து 76 ஆயிரம் செலவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-06-04 15:38 GMT

நாமக்கல்:

நாமக்கல் மற்றும் ராசிபுரம் உழவர் சந்தைகள் ரூ.56 லட்சத்து 76 ஆயிரம் செலவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உழவர் சந்தைகள்

விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி மற்றும் பழங்களுக்கு சரியான விலை கிடைக்கவும், அவர்கள் விளைவித்த விளைபொருட்களின் லாபத்தை இடைத்தரகர்கள் எடுத்து செல்வதை தடுக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், பழவகைகள் கிடைப்பதன் மூலம் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உழவர் ்சந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை காலை 6 மணி முதல் 10 மணி வரை தாங்களே நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்து, பின்னர் வேளாண் பணிகளை மேற்கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன.

அந்த வகையில் நாமக்கல் உழவர் சந்தை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி தொடங்கப்பட்டது. பின்னர் ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் உருவாக்கப்பட்டன. தற்போது மாவட்டத்தில் 6 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

புதுப்பிக்கும் பணி

இந்த நிலையில் 2021-22-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதிநிலை அறிக்கையில் உழவர் சந்தை புனரமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மற்றும் ராசிபுரம் உழவர் சந்தைகளுக்கு ஒரு உழவர் சந்தைக்கு தலா ரூ.28 லட்சத்து 38 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.56 லட்சத்து 76 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உழவர் சந்தைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு இதுவரை மொத்தம் 1,455 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகள் மூலமாக கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 914 விவசாயிகள் உற்பத்தி செய்த 17 ஆயிரத்து 663 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக வேளாண் வணிக பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்