பழனி முருகன் கோவிலில் உற்சவசாந்தி பூஜை

வைகாசி விசாக திருவிழா நிறைவையொட்டி பழனிமுருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது.

Update: 2023-06-09 19:00 GMT

வைகாசி விசாக திருவிழா

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் 6-ம் நாளில் திருக்கல்யாணம், 7-ம் நாள் தேரோட்டம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் 5-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.

உற்சவ சாந்தி பூஜை

இதையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சாந்தி கும்பபூஜை, ஹோமம் நடைபெற்று. பின்னர் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்