செய்துங்கநல்லூர் வாரசந்தையில்மறுமுத்திரையிடாமல் பயன்படுத்திய 8 மின்னணு தராசுகள் பறிமுதல்
செய்துங்கநல்லூர் வாரசந்தையில்மறுமுத்திரையிடாமல் பயன்படுத்திய 8 மின்னணு தராசுகளை தொழிலாளர் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள செய்துங்கநல்லூரில் புதன்கிழமைதோறும் நடைபெறும் வாரசந்தைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வாரசந்தையில் விற்கப்படும் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது
இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்துறை உதவி ஆணையாளர் திருவள்ளுவன் உத்தரவின்படி துணை ஆய்வாளர் ராம் மோகன் தலைமையில் தொழிலாளர்துறை ஆய்வாளர்கள் நேற்று செய்துநல்லூர் வார சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 8 கடைகளில் மறுமுத்திரையிடாமல் பயன்பாட்டில் இருந்த மின்னணு தராசுகளை தொழிலாளர் துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பஜாரிலும் தொழிலாளர் துறையினர் மின்னணு தராசுகளை ஆய்வு செய்தனர்.