'இணையதளங்களை நல்ல தேடலுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்'

‘இணையதளங்களை நல்ல தேடலுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்’ என்று ஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

Update: 2022-07-02 12:59 GMT

ஊட்டி

'இணையதளங்களை நல்ல தேடலுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்' என்று ஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

ஆண்டு விழா

ஊட்டியில் கிரசன்ட் கேசில் பள்ளியின் 25-வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் உமர்பாரூக் வரவேற்றார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதிஷ்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:-

இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் நம்பிக்கை. இணையதளங்களை நல்ல தேடலுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். பாடப்புத்தகங்கள் மூலம் அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியாது. இது மதிப்பெண் பெற மட்டுமே உதவும். தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால் அது மோசமானது.

உலகில் மேம்பட பல வாய்ப்புகளின் கதவுகள் காத்திருக்கின்றன. அதை நோக்கி செல்லுங்கள். வாழ்க்கை என்பது விலைமதிப்பற்றது. நேரம் மிகவும் பொன்னாது. இதை நினைவில் கொள்ளுங்கள். தேவையில்லாத காரியங்களில் ஈடுபட்டு உங்கள் வாழ்க்ைகயையும், நேரத்தையும் வீணாக்காதீர்கள்.

மரக்கன்று

நம்பிக்கை, அன்பு, கடின உழைப்பு ஆகிய குணாதிசயங்களை கொண்டு வாழக்கையில் பெரிய உயரத்தை அடைய முடியும். அனைவரும் பெரியவர்களை மதிக்கவும், கடவுளை நம்பவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை நேசிக்கவும் கற்று கொடுக்கப்பட்டுள்ளோம். முதலில் உங்கள் உணர்வுகள், உணர்ச்சிகள், காரியங்களை செய்வதற்கான நேரம் போன்றவற்றை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களை நம்புங்கள். உங்கள் கடின உழைப்பை நம்புங்கள். செயல்பாட்டில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் முடிவுகள் அதன் துணை தயாரிப்பு மட்டுமே. முடிவை பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் செய்யும் கடின உழைப்பையும், முயற்சியையும் நம்புங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்