திருச்சி விமான நிலையத்தில் ரூ.39¼ லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்றபோது, ரூ.39¼ லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-02-14 19:34 GMT

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்றபோது, ரூ.39¼ லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனை

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி உள்நாடுகளுக்கும் விமான சேவை உள்ளது.

இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அமெரிக்க டாலர்கள்

இந்தநிலையில் திருச்சியை சேர்ந்த அபுபக்கர் (வயது 38) என்ற பயணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, ரூ.39 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தன. அவற்றை துபாய்க்கு அவர் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர் சுங்கத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவர்கள் அபுபக்கரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்