மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கான நகர்ப்புற ஆதார வள மையம்

கோவையில் 3 பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கான ஆதாரமைய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

Update: 2022-12-15 18:45 GMT

கோவையில் 3 பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கான ஆதாரமைய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஆதார மையங்கள்

கோவையில் துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருச்சி ரோடு ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப ்பள்ளி ஆகிய 3 இடங்களில் ஆதாரவள மையங்கள் உள்ளன.

இதில் துணி வணிகர் சங்க மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவிகள் 12 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் மாற்றுத்திறன் மாணவிகளின் கை, கால்களுக்கு பயிற்சி, ஜிம் சைக்கிள் பயிற்சி, எடை தூக்கும் பயிற்சி, தூரப்பார்வை, கிட்டப்பார்வை குறைபாடு நீங்க பயிற்சி போன்றவை தினமும் ஒரு மணி நேரம் அளிக்கப்படுகிறது.

எளிய முறையில் பயிற்சி

இது குறித்து பயிற்றுவிக்கும் ஆசிரியர் கூறுகையில், துணிவணிகர் சங்க பெண்கள் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவிகளுக்கு எளிய முறையில் நவீன கருவிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கண் பார்வை மற்றும் காது கேட்கும் குறைபாடு உள்ளவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு மற்ற பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறன் மாணவ -மாணவிகளும் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

மேலும் செய்திகள்