நகர்ப்புற தூய்மை இயக்க விழிப்புணர்வு முகாம்
நகர்ப்புற தூய்மை இயக்க விழிப்புணர்வு முகாம்
விருதுநகர் நகராட்சி சார்பில் நகர்ப்புற தூய்மை இயக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நகராட்சி பூங்காவில் நடைபெற்ற முகாமில் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தூய்மை பணி விழிப்புணர்வு பேரணியை நகராட்சி தலைவர் மாதவன் தொடங்கி வைத்தார். மேலும் நகராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தனலட்சுமி, நகராட்சி என்ஜினீயர் மணி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.