உப்பட்டி தொழிற்பயிற்சி நிலைய அணி முதலிடம்
மாநில அளவிலான கால்பந்து போட்டியில் உப்பட்டி தொழிற்பயிற்சி நிலைய அணி முதலிடம் பிடித்தது.
பந்தலூர்,
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 17, 18-ந் தேதிகளில் நடைபெற்றது. இதில் கபடி, கால்பந்து, கைப்பந்து, இறகு பந்து, சிலம்பம், கராத்தே, செஸ் மற்றும் தடகள போட்டிகள் நடந்தது. கால்பந்து இறுதி போட்டியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் அணி, வட சென்னை அணியை வீழ்த்தி மாநில அளவில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கினார். உப்பட்டி தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி நிலைய முதல்வர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.