உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி அமாக விளைச்சல் அடைந்துள்ளது. ஆனால் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-12-05 18:45 GMT

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முட்டைகோஸ், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி, கத்தரிக்காய், வெங்காயம், கொத்தமல்லி என அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் ஆண்டுதோறும் அனைத்து பருவத்திலும் காய்கறிகள் சாகுபடி செய்வதே சிறப்பு அம்சமாகும். முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் காய்கறிகள் விளைச்சல் அடைவதால் நல்ல திறட்சி, சுவையாக இருக்கும்.

இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய அன்டை மாநிலங்களில் கடைமடை பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. கடைமடை பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி கடந்த மாதம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது தக்காளி பறிக்கப்பட்டு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகிறது‌. போதிய பாசன வசதி மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் தக்காளி நன்றாக விளைச்சல் அடைந்து உள்ளது. அதே நேரம் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கடந்த வாரம் 15 கிலோ தக்காளி அடங்கிய கூடை ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து ரூ.100-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்