உப்புக்கோட்டை பகுதியில்பூத்துக்குலுங்கும் செண்டு பூக்கள்
உப்புக்கோட்டை பகுதியில் செண்டு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
தேனி மாவட்டம் கோட்டூர், சீலையம்பட்டி, உப்புக்கோட்டை, வாழையாத்துப்பட்டி, பாலார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை, முல்லை, ஜாதிப் பூ, சம்பங்கி, கனகாம்பரம், செண்டுப்பூ உள்பட பலவகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் செண்டுப்பூ, கோழி கொண்டை, மல்லிகை, வாடாமல்லி ஆகிய பூக்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. பூத்துக்குலுங்கும் செண்டு பூக்கள் பறிக்கப்பட்டு அந்ததந்த பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தேனி பூ மார்க்கெட்டில் செண்டுப்பூ கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பூக்கள் விளைச்சல் அடைந்தும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.