கடைசி வரை பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து; என்ன காரணம்? கவர்னர் தமிழிசை விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-07 08:37 GMT

கோவை,

கோவையில் உள்ள பல்கலைக் கழகமொன்றில் 21ம் நூற்றாண்டில் உயர்கல்விக்கு மாணவியரை தயார்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், கருத்தரங்கத்தின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனவும், அனைத்து இடங்களிலும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படவேண்டும் என கூறினார்.

மேலும் அப்போது தமிழகத்தில், தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்கிற விவாதம் கடுமையாக சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் தான் கோயில்கள் அதிகமெனவும், இருக்கிற அடையாளத்தை மாற்ற வேண்டாம் எனவும், அடையாளங்களை மாற்றுவதால் அநாவசியமான மோதல்களே ஏற்படும் என தெரிவித்தார்.    

 

Tags:    

மேலும் செய்திகள்