தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்று தீர்ந்தது
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழக விரைவு பஸ்களுக்கும் முன் பதிவு தொடங்கி அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து விட்டன.
இந்நிலையில் ஆம்னி பஸ்களுக்கான கட்டணத்தை ஆம்னி பஸ் உரிமையாளர்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏழை, எளிய நடுத்தர மக்கள் ஆம்னி பஸ்களை நெருங்க முடியாத அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் நிலை உள்ளது. கிட்டத்தட்ட விமான கட்டணம் அளவிற்கு ஆம்னி பஸ் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன .
பகல் நேர ரெயில்
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து கடந்த காலங்களில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதேபோன்று வருகிற தீபாவளி பண்டிகைக்காகவும் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு குறிப்பாக செங்கோட்டை மார்க்கத்திலும் சேர்கார் வசதியுடன் முன்பதிவு இல்லாத பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தென்னக ரெயில்வே நிர்வாகம் நெல்லை மார்க்கத்திலும் செங்கோட்டை மார்க்கத்திலும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில்களை தேவைப்படும் அளவிற்கு இயக்குவதன் மூலம் ஏழை தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தீபாவளி பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.