பவானியில் குறையாத காவிரி ஆற்று வெள்ளம்: 3-வது நாளாக 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

Update: 2022-08-30 20:01 GMT

பவானியில் குறையாத காவிரி ஆற்று வெள்ளம் காரணமாக 3-வது நாளாக அங்குள்ள 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

வெள்ளம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதன்காரணமாக பவானி புதிய பஸ் நிலையம், நேதாஜி நகர், காவிரி நகர், காவிரி வீதி, தினசரி மார்க்கெட் அருகே உள்ள பசுவேஸ்வரர் வீதி, பவானி பழைய பாலம் அருகே உள்ள பாலக்கரை ஆகிய தாழ்வான பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த 3 நாட்களாக வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

முகாம்களில் தங்க வைப்பு

இதனால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அவ்வாறு தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்