அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-11-11 18:45 GMT

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு முகாம்

மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளது. அதன்படி www.eshram.gov.in என்ற தேசிய இணையதளம மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் அமைப்பு சாரா மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களான கட்டுமான தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாய தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், காய்கறி, பழ தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், தச்சு வேலை செய்வோர், கேபிள்டிவி ஆபரேட்டர்கள், டீக்கடை தொழிலாளர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், முடி திருத்துவோர், பேப்பர் வினியோகிப்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பால்காரர்கள், தூய்மை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள், கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், இதர நலத்திட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களையும் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யும் நோக்கத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ஆகையால் தொழிலாளர்கள் சிறப்பு முகாமிலோ, பொதுசேவை மையத்திலோ, www.eshram.gov.inஎன்ற இணையதளத்தில் சுயமாகவோ பதிவு செய்யலாம்.

ஆவணங்கள்

இதில் பதிவு செய்ய ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டு உள்ள செல்போன் எண், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அடிப்படை விவரங்களுடன் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் 59 வயது வரை உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். பி.எப், இ.எஸ்.ஐ. செலுத்தும் பணியாளராகவும், வருமான வரி செலுத்துபவராகவும் இருக்க கூடாது. இதற்கு எந்தவித பதிவு கட்டணமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்