எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்
எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரைநகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தெருக்களில் இரவில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், பெண்கள் யாரும் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே தெரு மின் விளக்கை எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளனர்.